Saturday, March 7, 2015

தெரிந்து கொள்வோம் வாங்க .

 டைனமைட்டு


டயனமைட்டின் வரைபடம்
  1. நைட்ரோ கிளிசரினில் ஊறவைத்த ரம்பத்தூள் (அல்லது இது போன்ற உறிஞ்சும் தன்மையுள்ள பொருள்)
  2. வெடி பொருளைச் சுற்றி பாதுகாப்புப் பூச்சு.
  3. வெடிமூய் (blasting cap)
  4. வெடி மூய்யுடன் இணைக்கப்பட்ட மின் வடம் (Electrical cable) அல்லது எரியிழை (Fuse)
டயனமைட்டு என்பது தழைமவீருயிரகக் களிக்கரை (நைட்ரோகிளிசரின்) என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களைபயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் ஆற்றலுடன் தொடர்புடையது என்பதாகும்.
டயனமைட்டு வழக்கமாக 8 அங்குலம் (20 செ.மீ) நீளமும் 1 1/2 அங்குலம் (3.2 செ.மீ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) அளவுகளில் குச்சியாக விற்கப்படுவதுண்டு. வேறு சில அளவுகளும் உள்ளன. நைட்ரோகிளிசரின் சார்புடைய டயனமைட்டின் தேக்க ஆயுள் (shelf life), தகுதியான தேக்க வரையறைகளுக்கு (storage conditions ) உட்பட்டு அது உருவாக்கிய நாள் (date of manufacture ) முதல் ஒரு ஆண்டு எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்.
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) (ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி trinitrotoluene (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.
நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் (ketone) சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட் cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. படைத்துறை டயனமைட்டு (Military Dynamite) நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான வேதிப்பொருட்களைபயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது[2]. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்றஉருவகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது 
டூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.

No comments: