Monday, August 4, 2014

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்த்த முடிவு

        தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தையல், ஓவியம், உடற்கல்வி, கைத்தறி, இசை, கணினி உட்பட பாடங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.




இவர்களுக்கு வாரம் மூன்று அரைநாட்கள் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்வு கால விடுமுறையையும் கணக் கில் கொண்டு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் தேதி முதல் கணக்கிட்டு மேற்கண்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர்கள் வாங்கும் ரூ.5 ஆயிரம் சம்பளத்துடன் ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.7 ஆயிரமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தியாவிலேயே கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுவதால் தமிழகத்துக்கு, மத்திய அரசு அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக் கும் இடைநிலைக்கல்வித்திட்டம் ஆகிய திட்டங்களுக்காக 2014-15ம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்துக்கு ரூ.400 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், 12 ஆயிரம் ஆசிரியர்களின் சம்பளத்துக்கு ரூ.288 கோடியும், ஆசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகளை வழங்க ரூ.5 கோடி, பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள், நூலகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ரூ.28 கோடி, பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.99 கோடி என அடங்கும். அதேபோல் அனைவ ருக்கும் கல்வி இயக்கத்திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் சம்பளத்துக்கு ரூ.900 கோடியும், புதிய தொடக்கப்பள்ளிகள், ஏற்கனவே உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு ஒதுக்கியுள்ள இந்த நிதி கடந்த ஆண்டை விட ரூ.500 கோடி அதிகமாகும் என்றனர்

No comments: