Monday, May 25, 2015

தண்ணீர் பற்றாக்குறையை இந்தியா சமாளிக்குமா?

இது தொடர்பாக, இந் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவில் நிலத்தடி நீரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. நீர் பாசன தேவையில், 70 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதுபோல், குடிநீர் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்கு, 80 சதவீதநிலத்தடி நீர் உபயோகிக்கப் படுகிறது.
 தண்ணீர் தேவை, பெருகி வருவதற்கேற்ப, உற்பத்தி இல்லை. அதனால், அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக உருவெடுக்கும்.இதற்கு, அதிகரித்து வரும் குடும்ப வருவாய், சேவை, தொழில்துறைகளின் வளர்ச்சி, மாறி வரும் வாழ்க்கை பாணி போன்ற பல காரணங்களை கூறலாம்.
அதே சமயம், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப் பும் பெருகி வருகின்றன. இதை நன்கு புரிந்து கொண்ட, அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தண்ணீர் துறை யில், 78,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. அதில், அடுத்த மூன்று ஆண்டுகளில், 18,000 கோடி ரூபாய் இந்தியா வில் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர் துறையில், சுத்திகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை என, பல வகை வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. இதனால், பம்பு செட், குழாய், மோட்டார், நீர் அளவை உள்ளிட்ட, ஏராளமான தொழில்கள் வளர்ச்சி காணும். தண்ணீர் வர்த்தக துறையில், இந்தியாவின் மையமாக, மகாராஷ்டிரா முன்னேறி வருகிறது. இங்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு துறைகளில், 1,200க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

No comments: