Monday, August 11, 2014

முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்

        
தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை.

  • BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து வளமைய   பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
  • முன்னதாக பட்டதாரி பணியிடங்களுக்கு பணி மாறுதல் நியமன ஆணை பெற்றவர்களை மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக விடுவித்து பணியில் சேர அனுமதிக்குமாறு கோரிக்கை. 
  • 2014-15 ஆம் கல்வியாண்டில் 1000 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்ய கோரிக்கை.

ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்

கோவை, : ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர்.

ஏ.இ.இ.ஓ., அலுவலக உதவியாளர்களாக ஆசிரியர்கள், கேள்விக்குறியாகும் மாணவர் கல்வி

Saturday, August 9, 2014

ஒன்றாம் வகுப்பில் தமிழ் கற்றால் பள்ளி இடைநிற்றல் இருக்காது' - தினமலர்


ஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதில், மாவட்டத்திற்கு, 1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம் இல்லாதது முக்கிய காரணம் என்கிறார், தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.

ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்

கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Friday, August 8, 2014

TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு

       ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

       மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Wednesday, August 6, 2014

பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

           அனைத்துவகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Monday, August 4, 2014

பாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்த்து TRB அறிவிப்பு.


ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு.

TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION

இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி:

  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.