Monday, August 4, 2014

FLASH NEWS: TNTET தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்

              ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக  சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய தலைவர் "தாள் 2 இறுதி பட்டியல்  இன்று நிச்சயம் வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Sunday, July 27, 2014

CEO & DEO Promotion Order Issued.


        பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

DSE.183 / A1 / E1 / 2014 DATED.25.07.2014 - NEW DEO / DEEO / IMS POSTS IN-CHARGE LIST CLICK HERE...

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600 

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250  

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500 

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200 

 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000


 6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000 

8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500 

 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

  11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500 

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250  

13. Tamilnau Teacher Education University -350.  

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்

English language training from 21.7.2014 to 20.8.2014-at Bengaluru for primary & BRTE

TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்



     வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.

இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.

இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Saturday, July 26, 2014

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி: பார்லிமென்டில் அனைத்து கட்சியினரும் காரசார பேச்சு


         'சிவில் சர்வீசஸ் தகுதி தேர்வு முறையை மாற்ற வேண்டும்; தேர்வுக்கான தேதியை வெளியிட்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்' எனக் கோரி, காங்கிரஸ் உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளும், ராஜ்யசபாவில் நேற்று கடும் அமளியில் இறங்கின. இதனால், ராஜ்யசபா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.



Tuesday, July 22, 2014

பள்ளிக்கல்வி - த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை / சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை

பள்ளிக்கல்வி - த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை / சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை சார்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மு.க.அலுவலரின் உத்தரவு

DSE - CEO - GENUINENESS REG INSTRUCTIONS CLICK HERE...

PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்...!


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம் - பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு சலுகை.


அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.