Tuesday, July 22, 2014

PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்...!


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம் - பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு சலுகை.


அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு.


பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்; டி.ஆர்.பி

            தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண் கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல்

         ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது.

10th Latest Study Material & Model Questions


Model Test Questions
Thanks to Mr. A. Sundaramoorthy, B.T.Asst., GHSS, KanniPatti, Dharmapuri Dt.

For Download our Previous Study Material - Click Here
English Study Material
  • English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
  • English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here

Monday, July 21, 2014

சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

22/07/2014

          பள்ளிக்கல்வி - த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை / சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை சார்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மு.க.அலுவலரின் உத்தரவு

மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்.21ல் நடைபெறும்

      ‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.           கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.

Sunday, July 20, 2014

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வை சுமார் 1.62 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு கூடங்கள் அனைத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.