Monday, May 25, 2015

ARGTA - செய்தி


அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நமது மாநில நிர்வாகிகள் மே மாதம் 27 ம் நாள் புதன்கிழமை “பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர், மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)" ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளனர்.


- மாநிலத் தலைவர்
ARGTA

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அறிவியல், வணிகவியல் படிக்க ஆர்வம்; பிளஸ் 1 வகுப்பில் மாணவர் விரும்பும் பிரிவில் சேர்க்க வேண்டும்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

45 ஆயிரம் ஆசிரியர்களின்பிரச்னைக்கு தீர்வு

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவுஎன்றபிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராகபதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க,பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கடந்த, 2003- 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி,இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில்,40 ஆயிரம்ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில்,5,000 ஆசிரியர்கள்தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன


தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள்அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும்பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்தவங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன்கேட்டுவிண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால்,வசிப்பிடத்துக்கு அருகில் வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம்.வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிறபகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது.


மாணவர் மைனராக இருந்தால், பெற்றோர் பெயரிலும், மேஜராகஇருந்தால், மாணவர் மற்றும் பெற்றோர் இருவரின் பெயரிலும்,வங்கிக் கடன் அளிக்கப்படும்.

கடன் தொகை, 4 லட்சம் ரூபாய் வரை, எவ்வித உத்தரவாதமும்தேவையில்லை. 4 லட்சம் முதல், 7 லட்சம் ரூபாய் வரை, மூன்றாம்நபர் உத்தரவாதம் அவசியம்; 7 லட்சம் ரூபாய்க்கு மேல், வாங்கும்கல்விக் கடனுக்கு, கடன் தொகை அளவுக்கான, சொத்தைஉத்தரவாதமாக அளிக்க வேண்டும்.

கடன் கோரும் விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரிசேர்க்கைக்கான சான்று, கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தின்உண்மை நகல், படிப்புக் காலம் முடியும் வரையிலான, கட்டணவிவரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.கல்லூரியில், முதலாம்ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்திய பின், கல்விக் கடன்அளிக்கப்பட்டால், கல்லூரியில் செலுத்திய முதலாம் ஆண்டுதொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கல்விக் கட்டணம்அனைத்தும், கல்லூரி நிர்வாகத்துக்கு, வங்கி மூலம் அனுப்பப்படும்.
கல்விக் கடனுக்கு, படிப்பு முடியும் வரையும், படிப்பு முடித்த ஓராண்டுவரையும் வட்டி இல்லை. கல்விக் கடனை திருப்பி செலுத்த,உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு, 60மாதங்களும், வெளிநாட்டில் படிப்போருக்கு, 84 மாதங்கள் வரையும்அவகாசம் தரப்படுகிறது.கல்லூரி சேர்க்கை உறுதியானஅனைவருக்கும், கல்விக் கடன் பெறும் தகுதி உண்டு. படிக்கும்காலத்தில், ஒவ்வொரு, செமஸ்டர் அல்லது ஆண்டுபருவத்தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும். ஏதாவது ஒரு பாடத்தில்தோல்வியுற்றாலும்,உடனடியாக அடுத்து நடக்கும் தேர்வில்,தோல்வியுற்ற பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையேல்,கல்விக் கடன் பாதியில் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு

மாணவர் குறைந்துள்ள தொடக்க பள்ளிகளில் ஆட்குறைப்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப் -டாப் வழங்குவதில் தாமதம்

Wednesday, May 6, 2015

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களை பின்தங்கியகுடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டணச் செலவை கல்வி உரிமைச்சட்டப்படி மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.