Monday, July 7, 2014

TNTET:20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு,இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும்-Dinakaran News

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறுகுளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடை களை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள் சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம் தேர்வு பட்டியலைவெளியிட தடை நீங்கியது. எனவே புதிய அரசாணை அடிப்படையில் விரைவில் தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும் என்று தெரிகிறது.

FORMS FOR TEACHERS


FORMSFORMATDETAILS OF FORMDOWNLOAD
TMCPDFTAMIL MEDIUM CERTIFICATEDOWNLOAD
ITEXCELIT FORM FOR THE YEAR 2013-2014 IN EXCEL FORMAT |CALCULATION SHEET.DOWNLOAD
EXAMEXCELPLUS TWO PRACTICAL BATCH SEPARATOR |CALCULATION SHEET.DOWNLOAD
EXAMWORDFORM-I,II,III | EBS.DOWNLOAD
EXAMPDFFORM-33 | ACCOUNT OF ANSWER BOOKS (MAIN AND ADDITIONAL ANSWER BOOKS) ISSUED TO/RETURNED BY THE ASSISTANT SUPERINTENDENTS.DOWNLOAD
EXAMPDFFORM-37 | QUESTION PAPER ACCOUNT.DOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL CEO INSPECTION FORMAT | SCHOOL ANNUAL REPORTDOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL CEO INSPECTION FORMAT | CEO INSPECTION ADDITIONAL PARTICULARSDOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL CEO INSPECTION FORMAT | CEO INSPECTION VISIT PARTICULARSDOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL INSPECTION FORMAT |CEO INSPECTION FORMATDOWNLOAD
INSPPDFState Level National Talent Search Examination ( X-STD ) NTSE FORMAT |DOWNLOAD
SELPDFPROPOSAL FOR SELECTION GRADE AND SPECIAL GRADEDOWNLOAD
PAYPDFPAY CERTIFICATE FOR SCHOOL EDUCATION TEACHERSDOWNLOAD
PAYPDFPAY CERTIFICATE FOR ELEMENTARY SCHOOL TEACHERSDOWNLOAD
PAYPDFYEARLY INCREMENT CERTIFICATEDOWNLOAD
CHALLANPDFSSLC CHALLAN FORM FOR SSLC TABULATED MARK LISTDOWNLOAD
FAPDFAPPLICATION FOR FESTIVAL ADVANCEDOWNLOAD
FAWORDAPPLICATION FOR FESTIVAL ADVANCEDOWNLOAD
CLPDFAPPLICATION FOR CLDOWNLOAD
ELPDFAPPLICATION FOR EL SURRENDERDOWNLOAD
MLPDFAPPLICATION FOR MLDOWNLOAD
MLWORDAPPLICATION FOR MLDOWNLOAD
RHPDFAPPLICATION FOR RHDOWNLOAD
LPCPDFLPCDOWNLOAD
PROFILEPDFTEACHERS PERSONAL PROFILEDOWNLOAD
TRANSPDFTEACHERS TRANSFER APPLICATIONDOWNLOAD
TRANSPDFTEACHERS MUTUAL TRANSFER APPLICATIONDOWNLOAD
ATTPDFSTUDENT ATTENDANCE CERTIFICATEDOWNLOAD
ATTWORDSTUDENT ATTENDANCE CERTIFICATEDOWNLOAD
80GGPDFDECLARATION BY THE ASSESSEE CLAIMING DEDUCTION U/S 80GG FORM NO. 10BADOWNLOAD
80GGWORDDECLARATION BY THE ASSESSEE CLAIMING DEDUCTION U/S 80GG FORM NO. 10BADOWNLOAD
EBSEXCELEBS FORMAT FOR PLUS TWO 2013-2014DOWNLOAD
EBSEXCELEBS FORMAT FOR SSLC 2013-2014DOWNLOAD
GPFWORDAPPLICATION FOR SANCTIONING PART FINAL WITHDRAWLS FROM GPFDOWNLOAD
GPFPDFAPPLICATION FOR SANCTIONING PART FINAL WITHDRAWLS FROM GPFDOWNLOAD
GPFPDFAPPLICATION FOR GPF TEMPORARY ADVANCEDOWNLOAD
GPFPDFAPPLICATION FOR GPF CLOSUREDOWNLOAD
NOCWORDA COMPLETE FORM SETUP FOR PASSPORT NOC WORD FILE | USED FONT - SunTommyDOWNLOAD
GENIUNEWORDIGNOU | MED |GENIUNENESS APPLICATION | WORD FILEDOWNLOAD
M.EdWORDIGNOU | MED | CONVOCATION FORMDOWNLOAD
VRSPDFVRS FORMDOWNLOAD
VAPDFVEHICLE ADVANCE FORMATDOWNLOAD
I.ACTPDFMODEL APPLICATION FOR INFORMATION ACTDOWNLOAD
PERMIWORDMODEL APPLICATION FOR GETTING PERMISSION FROM DSE AND DEE FOR LAND AND HOUSE PURCHASEDOWNLOAD
PERMIWORDMODEL APPLICATION FOR GETTING PERMISSION FOR HIGHER STUDIESDOWNLOAD
CERPDFசாதி /வருமானம்/இருப்பிடச்சான்றுக்கான ஒருங்கிணைந்த விண்ணப்பப் படிவம்.DOWNLOAD

GROUP 2 MATERIALS

TNPSC-தமிழ் களஞ்சியம் - Click Here

TNPSC-MENTAL ABILITY AND APTITUDE TEST Q&A 2013 - Click Here

TNPSC-GR. II  GENERAL KNOWLEDGE IN TAMIL Q & A - Click Here

TNPSC-GR. 2 தாவரவியல் ( botony) q & a - Click Here

TNPSC-GR. 2 உயிரியல் ( biology) q & a - Click Here

TNPSC-GR. 2 இயற்பியல் (physics) q & a - Click Here

TNPSC-GENERAL KNOWLEDGE QUESTIONS FOR VARIOUS EXAMS - Click Here

TNPSC-General Knowledge Question Answers - Click Here

TNPSC-General Awareness - Click Here

TNPSC இந்திய அரசியலமைப்பு ஷரத்துகள் பட்டியல் - Click Here

TNPSC GR. II GENERAL KNOWLEDGE Q & A - Click Here

TNPSC GR. II  GENERAL TAMIL Q & A - Click Here

TNPSC GR. II  GENERAL KNOWLEDGE IN ENGLISH Q & A - Click Here

TNPSC GR. 2 வேதியியல் (chemistry) q & a - Click Here

TNPSC GR. 2 & 4 ஐரோப்பிய வரலாறு ( europe history) q & a - Click Here

மீண்டும் ABL Cards !...

      2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்கிட திட்டம்- மாநிலத் திட்ட இயக்குனர்

Saturday, July 5, 2014

TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு - தினமலர்




TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட TRB முடிவு


                       ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக,  ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.

          கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


           சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Friday, July 4, 2014

குழந்தைகளின் அறிவு,ஆளுமை, சிந்தனை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் இணைய தளங்கள்

ரூ.2,699-க்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்! கார்பன் மொபைல்ஸ் அறிமுகம்

மிகக்குறைந்த விலையில் லோ பட்ஜெட் ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது கார்பன் மொபைல்ஸ் நிறுவனம்.

இந்நிலையில், மார்க்கெட்டிலேயே மிகக்குறைந்த விலையில், ரூ.2,699-க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது கார்பன் மொபைல்ஸ்.ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆபரெட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஏ-50-எஸ் என்ற இந்த மாடலில் 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் மீடியாடெக் டுவல் கோர் பிராசசர் இருப்பதால்கிராபிக்ஸ் நன்றாக வேலை செய்கிறது. டூவல் சிம்முடன் வெளிவரும் இந்த மாடலில் 3.5 இன்ச் எல்.சி.டி. ஸ்கீரீன் உள்ளதால் வீடியோ காட்சிகளை தெளிவாக பார்க்கலாம். 32 ஜி.பி. வரை மெமரி கார்டு சப்போர்ட் உள்ளது.இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் காம்பேக்டாகவும், ஸ்லிம்மாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் எடையும் வெறும் 120 கிராம் தான். மற்றபடி, வழக்கம்போல ஜி.பி.எஸ்., வை-ஃபை, புளூடூத், எல்.இ.டி பிளாஷ் சப்போர்ட் போன்றவையும் உள்ளன.ஆனால், மைனஸ் பாயின்ட்களும் நிறைய உள்ளது. குறிப்பாக, கேமிராவை பொறுத்தவரை 2.0 மெகா பிக்சல் மட்டுமே பிரண்ட் மற்றும் ரியர் கேமிராக்கள் உள்ளது. 3ஜிசப்போர்ட்டும் கிடையாது. 1100 எம்.ஏ.எச் பேட்டரியுடன் கொண்ட இந்த மாடலில் பேட்டரி பேக்அப் பெரிய மைனஸ்.

பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டுமே முதற்கட்டமாக கிடைக்கிறது.

PG-TRB இல் இயற்பியல்,பொருளியல்,வணிகவியல் பாடப் பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண்

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
அவை எந்தெந்த வினாக்கள் என்பது இன்னும் சிறிது நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இன்றோடு PG க்கான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கும் வரை காத்திருங்கள்.
ஏற்கனவே நேற்று TET challenging key answer சம்பந்தப் பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பது குறிப்பிடதக்கது.
ஆயினும் அமர்வு நீதிமன்றத்தில் GO MS 71 க்கு எதிராகவும், 5% தளர்விற்கு எதிராகவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் TET பணி நியமனத்தைவிட PG க்கான பணி நியமனம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
கல்விசெய்தி வேண்டுகோளிற்கிணங்க நீதிமன்றம் சென்று தகவல் சேகரித்து தந்தமைக்கு திரு விஜயகுமார் சென்னை அவர்களுக்கு நன்றி.

கலையரங்கத்தில் இயங்கும் அரசுப்பள்ளி

கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி அருகே மணப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி போதிய வகுப்பறைகளின்றி கலையரங்கம் மற்றும் சுயஉதவி குழுக்கட்டடங்களில் இயங்குவதால், மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
இப்பள்ளி 2011ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கச்சிராயன்பட்டி, பட்டூர், மாங்குளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடத்த வகுப்பறைகள் இல்லாததால், 3 ஆண்டுகளாக, அருகிலுள்ள கலையரங்கம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக் கட்டடங்களில் நடத்தப்படுகின்றன.
பள்ளிக்கென விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், சிரமங்களுக்கிடையில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உள்ளது. புதிய பள்ளிக் கட்டடத்திற்கென்று ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கிக் கொடுத்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான பணி துவங்கவில்லை.
ஊராட்சி தலைவர் மாணிக்கம் கூறுகையில், '' பஸ் ஸ்டாப் அருகே பள்ளிக்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி கொடுக்கப்பட்டன. ஒன்றரை ஆண்டுக்கு முன் அங்கு கட்டடம் கட்ட கல்வித்துறை சார்பில் ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. வி.ஏ.ஓ., நிலத்தை ஆய்வு செய்து சான்றளித்துள்ள நிலையில், வருவாய்த்துறை உயரதிகாரிகள் ஏனோ சான்றளிக்க மறுக்கின்றனர். இதனால் புதிய பள்ளிக் கட்டடம் கட்டும்பணி தாமதமாகிறது. விரைவில், கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.