Tuesday, July 15, 2014

TNTET Paper 1 new weightage list will publish soon.

         இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்


        இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.


         அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

TNTET - 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

         ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில்சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

TRB TNTET New Weightage, Provisional Mark List Published. Flash News: TRB TNTET New Weightage, Provisional Mark List Now

Published TRB Official Website.

  • For View TNTET Provisional Selection list notification - Click Here 
  • For View TNTET New Weightage Individual Query - Click Here

Monday, July 14, 2014

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை 97 நாள் -12.07.2014 & தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

காமராசர்

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

       பள்ளி செல்லும் மாணவர்கள் பங்கேற்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
           மாணவர்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தவும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதான கருப்பொருள் (Focal Theme) முன்வைக்கப்படுகிறது.

1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பதை அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளது; 7வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 12, 2014

புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன


         புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன.தொகுப்பூதிய காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டி கோரிக்கை .மேலும்



18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர்.


          15 நாட்களுக்குள் 18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் இன்று பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு.

        3 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை வளர்ச்சிக்காக கூடுதல்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் வீரமணி

Friday, July 11, 2014

கணிதப்புதிர் காக்டெய்ல் செர்ரி

நம்ம வாத்தியார் சுஜாதா மனித மூளையை பற்றிதலைமைச்செயலகம் எனும் நூலில் தந்துள்ள “காக்டெய்ல் செர்ரி” எனும் புதிரை அவர் கூறியவாறேகூறுகிறேன் விளக்கம் மட்டும் அடியேனுடையது(வாத்தியார் சொன்ன விளக்கம்தான் இருந்தாலும்கொஞ்சாம் சிஷ்யனுடைய பங்களிப்பும் கொஞ்சம்இருக்கிறது சுஜாதா அபிமானிகள் மன்னிக்க )
 தலைமைச்செயலகத்திலிருந்து வாத்தியார் என்னசொல்லி இருக்கார்னு பார்ப்போம்
காக்டெய்ல் செர்ரி” என்கிற இந்த புதிர் மிகவும் பிரசித்தம்ஆனது .புத்திசாலிகளே திணறிப்போய் இதற்கு விடைகிடையாது என்று கைவிட்டிருக்கிறார்கள்.புதிர் மிகஎளியது  நான்கு தீக்குச்சிகளை படத்தில் உள்ளவாறுவைக்க வேண்டும் .உள்ளே ஒரு செர்ரி பழம் ,ஆப்பிள்,ஆரஞ்சு ஏதாவது பழம்.புதிர் என்னவெனில் இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும்இடம் மாற்ற வேண்டும் .பழம் கிளாஸுக்கு  வெளியே இருக்க வேண்டும்.கோப்பையின் வடிவம் மாறக்கூடாது.

விளக்கம்
வாத்தியார் கூறிய புதிரில் மேலே வலது இடது என இரண்டு தீக்குச்சிகள் உள்ளது.அதை தாங்கி பிடித்தவாறு  நடுவில் ஒரு தீக்குச்சியும் கோப்பையின் கைப்பிடி போல ஒரு தீக்குச்சியும் ஆக மொத்தம் நான்கு தீக்குச்சிகள் உள்ளது
இப்போது முதல் நகர்தலாக தாங்கி பிடித்தவாறு உள்ள தீக்குச்சியை வலப்புறமாகநகர்துங்கள் எதுவரை  தெரியுமா .மேலே வலப்புறம் உள்ள தீக்குச்சிவரை  .முதல்நகர்த்தலின் முடிவில் கீழ்கண்டவாறு படம் மாறி இருக்கும்  



இரண்டாவது நகர்தலாக மேலே இடதுபுறம் உள்ள தீக்குச்சியை எடுத்து கீழ்புறம்நோக்கி வைக்க வேண்டும் .இரண்டுதீக்குச்சிகளை மட்டும் நகர்த்தியதில் செர்ரி பழம்வெளியே வந்து விட்டது .ஆனால் “ஷேப்” அதாங்க வடிவம் மாறவில்லை படம் கீழே கண்டவாறு மாறி இருக்கும்

                                 
விளக்கியதில் பிழையிருந்தால் அடியேனை மன்னிச்சுக்குங்க  விளக்கம் புரிஞ்சுஇருந்தால் நம்ம வாத்தியாருகு ஒரு “ ஜே “ போடுங்க.

- நன்றி திரு குரு அவர்கள் ........