Saturday, July 19, 2014

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு‍‍‍‍‍‍‍‍‍; அரசு தீவிர ஆலோசனை

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது. தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி  நடைபெற்று வருகிறது.சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.

TRB Asst Professors Recruitment Interview Called

Friday, July 18, 2014

வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய இயற்கை வழி..!


கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!

Thursday, July 17, 2014

TNPSC MATERIAL | TNPSC QUESTION PAPERS | LATEST TNPSC NOTIFICATION | TNPSC RESULTS | TNPSC DEPARTMENTAL EXAM

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை; சுய சான்றொப்பமே போதுமானது

அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.


5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்

மாதச் சம்பளக்காரர்கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.


புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.அடுத்த நியமனம்: நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

TET Paper 1: இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்படும்.

           புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்

           ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய  அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்பட்டு விரைவில்  புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

         கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது.  பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Tuesday, July 15, 2014

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால்,அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன.

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.

         அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்புவிரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.