Monday, June 30, 2014

BRT கூண்டோடு மாற்றம்!, உண்ணாவிரதம் இருக்க ஆசிரியர்கள் முடிவு

      தமிழகம் முழுவதும் 4,587ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசி ரியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது. 


        சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருச்சி மாவட்ட செயலாளர் மகேஷ் வரவேற்றார். மாவட்ட பொரு ளாளர் மணிவண்ணன், மாநில செய்தி தொடர் பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலை வரும், நிறுவனருமான சம்பத் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில பொருளாளர் கார்த்திகேசன், மாநில தலைமை நிலைய செயலாளர் வேலுச் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
        கூட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் 3 ஆண்டுக ளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை உடனே ரத்து செய்யவேண்டும். அரசு ஆணை எண் 137ன் படி அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் மாறுதல் நெறிமுறைகள் உள்ளடக்கி யது என்பதால் ஒட்டுமொத்தமாக 4,587 ஆசி ரியர் பயிற்றுனர்களுக்கும் மாறுதல் அளித்திருப்பது விதிக்கு புறம்பானது என்பதையும், இதனால் ஒவ் வொரு வட்டாரத்திலும் புதிய பணி இடத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை அரசுக்கும், கல்வித்துறைக்கும் தெரிவிப் பது, 1.1.2014ல் இருந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களுக் கும் உடனடியாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஆசிரியர் பயிற்று னர்களுக்கு 5 ஆண்டுக ளாக வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அகிம்சை முறையில் அனை த்து சங்கங்களையும் ஒன்றிணைத்து மாநில அளவில் சென்னையில் உண்ணாவிரதம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இணை செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

         கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 
 
          இதை விசாரித்த ஐகோர்ட், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 83 பேரின் தேர்வை ரத்து செய்ததுடன், முறைகேடு நடந்ததையும் உறுதி செய்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்வை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்து, நேற்று தீர்ப்பளித்தது. இதன்படி, தமிழகத்தில் 83 டி.ஆர்.ஓ.,க்கள் பதவி இழக்கின்றனர்.

'டிஸ்மிஸ்' எளிதல்ல:

          இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் கூறியதாவது: எழுத்து தேர்வில், குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு, மதிப்பெண் அளிப்பதில் தாராளம் காட்டப்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம். அதன் மீது விசாரணை நடந்து தீர்ப்பு வர வேண்டும். அப்படி, மறு ஆய்வு மனு மீதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்படும். அப்போது, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது குறித்த அரசாணையை, தமிழக அரசு வெளியிட வேண்டும். அப்போது தான், 83 பேரையும், பணி நீக்கம் செய்ய முடியும். 83 பேரும், தற்போது, ஒன்று, இரண்டு பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக உள்ளனர். எனவே, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் தெரிவித்தது.

M.Ed.

Bharathidasan -M.Ed. ADMISSION NOTIFICATION FOR 20...: M.Ed. Advertisement (2014-2015)  M.Ed. Application & Prospectus

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் .

1.வாணக்கன்காடு PUMS
2.கிருஷ்ணம்பட்டி PUMS
3.அதிரான் விடுதி PUES
4.குலப்பென்பட்டி PUMS
5.ராசாக்குடியிறுப்பு PUES
6.தெக்கிக்காடு PUMS
7.தெக்கிக்காடு PUMS
8.குறும்பிவயல் PUMS
9.வெள்ளாளவிடுதி PUMS
10.மேலப்பட்டி PUES
11.கருக்காக்குறிச்சி PUMS
12.முத்தானபட்டி PUES
13.கிளாங்காடு PUES
14.சொக்கம்பேட்டை PUES
15.புதுக்கோட்டை விடுதி PUMS
16.விளாரிப்பட்டி PUES
17.சூரியன் விடுதி PUES
18.மைலன்கோன்பட்டி PUMS

19.ராங்கியன்விடுதி புதியது PUMS
20.ராங்கியன்விடுதி பழையது PUES
21.ஒடப்பவிடுதி PUMS
22.ஒடப்பவிடுதி PUMS
23.குளந்திரான்பட்டு PUMS
24.சாஞ்சாடிதெருPUES

25.பாப்பாப்பட்டி PUMS

Monday, June 23, 2014

போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்


வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், 
அவர் போலி கையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது 
அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் கல்வி துறை அதிகாரிகள் மத்தியில் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஏ திட்ட 
முதன்மை கல்வி அதிகாரியாக மதி என்ற பெண் அதிகாரி இருந்து 
. இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக பள்ளி கல்வி துறை செயலர் 
ஷபிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை.
 இந்த நிலையில், எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த மதி 
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது அம்பலமாகி உள்ளது. அதன் 
விவரம் வருமாறு: 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்தது. 

இதற்காக மாவட்டம் தோறும் ஓவியம், தச்சு, கணினி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகுதி உள்ளவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. அப்போது, வேலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட 
எண்ணிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. 
இந்த நிலையில், அப்போது வேலூர் மாவட்ட எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த மதி, பணத்தை பெற்று கொண்டு, தனது செல்வாக்கை 
பயன்படுத்தி 7 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். இந்த பணி நியமன ஆணையில் ரெகுலர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கையெழுத்து போட 
வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், எஸ்எஸ்ஏ திட்ட அதிகாரி மதியே 
நியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி பணியில் சேரும்படி உத்தரவிட்டார். போலி கையெழுத்து போடப்பட்ட பணி நியமன ஆணையை பெற்று கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பணிக்கு சென்றனர். 

அப்போது வேலூரில் அரசு பள்ளியில் இந்த பணி நியமன ஆணையை பார்த்த 
அப்பள்ளி தலைமை ஆசிரியை, ரெகுலர் முதன்மை கல்வி அதிகாரி பொன்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நியமன ஆணையில் உங்கள் கையெழுத்து 
வேறு மாதிரி உள்ளதே என்று சந்தேகத்துடன் கேட்டார். உடனே அந்த பள்ளிக்கு சென்ற பொன்குமார், அந்த நியமன ஆணையை வாங்கி பார்த்தார். அதில் போலி 
கையெழுத்து போடப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதுகுறித்து பள்ளி 
கல்வித்துறை செயலருக்கு ஆதாரத்துடன் நியமன ஆணை உள்ளிட்ட 
ஆவணங்களை அனுப்பி வைத்தார். அதன்பேரில் இணை இயக்குனர் பழனிசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த அதிகாரிகள் 
குழு உண்மை நிலையை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எஸ்எஸ்ஏ திட்ட அதிகாரி மதிக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால் அவரால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை.
 இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கருகும் மொட்டுகள்! இரும்பு கூடார வகுப்பறைகளால் பரிதாபம்; கருணை காட்டுமா பள்ளிகல்விதுறை?

கடும் வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து, குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. அம்பத்துார் மண்டலம், 86வது வார்டில் உள்ள, மண்ணுார் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், மாநகராட்சி துவக்க பள்ளி உள்ளது.


100 பேர் 59 ஆகினர் : இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 மாணவ, மாணவியர் வரை படித்த இந்த பள்ளியில், தற்போது 59 பேர் மட்டுமே படிக்கின்றனர். மேலும், 28 குழந்தைகளுக்காக, இந்த பள்ளி அருகில், ஒரு அங்கன்வாடி மையமும் இயங்குகிறது. ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அனல் தகிக்கும் இரும்பு கூடாரத்தில் இயங்கி வருகின்றன. கடுமையான வெயிலின்போது, காற்றோட்ட வசதியின்றி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலம் மோசமாக பாதிக்கப்படுகிறது. அதை கண்ட, அந்த பகுதியை சேர்ந்த சில அமைப்புகள், மின்விசிறிகள் வாங்கிக் கொடுத்து உதவின. ஆனால், அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், குழந்தைகள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டடம் சேதமடைந்த பின், இரும்பு கொட்டகை அமைக்கப்பட்டது. இங்கு குடிநீர் வசதியும் இல்லை. அருகில் உள்ள மசூதியில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.கட்டடம் கட்ட மண்பரிசோதனை நடந்தபோது, பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் வெளிவந்தன. இந்த இடம் குளமாக இருந்து குப்பை கொட்டி மூடப்பட்டதால், கட்டடம் கட்டும் திட்டம் கை விடப்பட்டதாக கூறப்பட்டது.பள்ளிக்கு முன், மாணவ, மாணவியரை காயப்படுத்தும் வகையில், இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பகுதிவாசிகள் அந்த வேலியை ஒட்டி வாகனங் களை நிறுத்தியும், குப்பை கழிவுகள் கொட்டியும் இடையூறு செய்கின்றனர்.இவ்வாறு பெற்றோர் கூறினர்.

அதிர்ச்சி வைத்தியம் : இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி, மாநகராட்சி எல்லையில் உள்ளது. பள்ளியின் பராமரிப்பு, நிர்வாக கட்டுப்பாடு என, அனைத்து பொறுப்பும் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்திடம் உள்ளது. எனவே, மாநகராட்சியிடம் முழுமையாக பள்ளியை ஒப்படைத்தால் மட்டுமே எங்களால், பராமரிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா என, அவர்கள் கேள்வி எழுப்பி, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.இந்த விஷயத்தில் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தனி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி

          இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 117
பணி: கிரேடு 'பி' அதிகாரி
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரவினருக்கு ரூ.400, SC/ST/PWD பிரிவினர் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
சம்பளம்: மாதம் ரூ 47,855.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.

* மூன்றாண்டு வரையறை ஆசிரியர் பயிற்றுனர்களுக்குமட்டும் பொருத்திப் பார்த்து ஈவு இரக்கமற்ற வகையில்பந்தாடப்பட்டுள்ளனர்.ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஆசிரியர்களுக்குரிய மாறுதல் நெறிமுறைகள் பின் பற்றப் படவேண்டும்.

* இந்த மூன்றாண்டு வரையறை தமிழ்நாடு அரசின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரையில் தமிழக அரசு பொருத்திப் பார்க்கத் தயாராகி விட்டது என்பதற்கான சோதனை முயற்சியின் ஆய்வுக் களமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதோ?எனும் ஐயப்பாடு எழுந்துள்ளது.

*ஆசிரியர் பயிற்றுனர்களின் பேரவலத்தைச் சகித்துக் கொள்ளவும், பார்வையாளராக நின்று வேடிக்கை பார்க்கவும் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் இயக்கங்கள் தயாராக இருக்காது என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் தளத்தில் காணப்படும் கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டு பல்வேறு வகையான ஆலோசனைகள், ஐயங்கள்,கோரிக்கைகள், மனக்குமுறல்களை யெல்லாம் ஆசிரியர்கள் கொட்டித் தீர்த்த காலங்களிலெல்லாம் ஆசிரியரோடு சமரிட்டும், சமாதானம் செய்தும் ,மௌன சாட்சியாக நின்று அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் பலா பலன்களை மிகைபடுத்தி எடுத்துரைத்தும், பலவீனங்கள், குறைபாடுகள் ஏதுமே இல்லாத அற்புதமான திட்டம் எங்களது அனைவருக்கும் கல்வித் திட்ட மே என்று எல்லா உயர் மட்ட அதிகாரிகளுக்காகவும் வக்காலத்து வாங்கிக் கொண்டு களப் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுனர்களின் மீது சிறு துளி பச்சாதாபம் கூட இன்றி மிக மிக மோசமாக நடத்தி இருப்பது கொடும் செயலாகும்.இந்த கொடும் செயலைக் கேள்விப்படும் பொழுது மனதிலும் , உடம்பிலும் பெரும் அதிர்வலைகள்ஏற்படுகிறது.

*வரலாற்றின் பக்கங்களில் மத அழிப்பு, மொழி அழிப்பு, ஜனநாயகப் படுகொலை, இனப்படுகொலை போன்றவற்றை காண்கிறோம். அது போன்று தமிழ் நாட்டின் கல்வி வரலாற்றில் ஆசிரியர் பயிறுனர்கள் நடத்தப் பட்டிருக்கிற விதமும் வருங்காலவரலாற்றில் பதிவு செய்யப்படாமல் இருக்கப்படுவதற்கு என்னென்ன வழிவகைகள் மேற்கொள்ளப் ப ட வேண்டுமோ அத்தகு திசை வழி நோக்கிஅனைவருக்கும் கல்வித்திட்டம்பயணம் தொடர வேண்டும். 

இதுவே தமிழ்கூறும் நல் உலகத்தின் வேண்டுகோளில் ஒன்றாகும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான மனிதநேய மையம் இலவச பயிற்சி


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதற்காக மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்டணமில்லா பயிற்சி சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மனிதநேய கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட பல்வேறு மத்திய, மாநில பணிகளுக்காக நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்ள இலவச பயிற்சி அளித்து வருகிறது.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேய மையத்தில் படித்த 46 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்நிலை தேர்வுதொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுக்காக மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை முதல்நிலை தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கிறது. 

 இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியும், ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்ய, சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில் நுழைவுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்நுழைவுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் 2 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேய மையத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

 விண்ணப்பிக்க கடைசி தேதி 22.7.2014 ஆகும். 23.7.2014 முதல் மாணவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்தில் தேர்வு எழுத விரும்புகிறார்களோ, அந்த மாவட்டங்களில் தேர்வு எழுத நுழைவுத்தேர்வுக்கான தங்களின் ஹால்டிக்கெட்டை மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள், தங்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டையை ஹால்டிக்கெட்டுடன் கொண்டுவரவேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 3-ந் தேதி நடைபெறும். மேற்கண்ட தகவல்கள் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

DEE - மாவட்ட மாறுதல் பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் கவனத்திற்கு !!

இன்று -மாவட்ட மாறுதல் பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் -ONLINE -இல் ஏற்றிய ஒரு COPY -ஐ AEEO அலுவலகத்தில் பெற்று அதை சரிபார்த்து கையொப்பம் இட வேண்டும்

Friday, June 13, 2014

SPECIAL TET EXAM

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

          மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

            இந்தத் தேர்வை எழுதிய 4,477 பேரில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தி ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 4,477 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,694 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதால், இவர்கள் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்கள் பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்

ஆசிரியர்கள் பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்

ஊராட்சி ஒன்றிய, நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

ஜூன் 17 முதல் 28-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது.
ஜூன் 17-ஆம் தேதி முற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை 
ஆசிரியர்களுக்கு 
பணிமாறுதல் கலந்தாய்வும்,

அன்று பிற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 
பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.

18-ஆம் தேதி முற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் 
லந்தாய்வும்,

பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், 
பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.

19-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல்
 (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) கலந்தாய்வும்,

21-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் 
மாறும் கலந்தாய்வும்,

23-ஆம் தேதி முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
 மாறுதல் கலந்தாய்வும்,

பிற்பகலில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 
பதவி உயர்வு  கலந்தாய்வும் நடைபெறும்.

வரும் 24-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் 
கலந்தாய்வும்,

25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள் 
மாறுதல் கலந்தாய்வும்,

26-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் 
மாறுதல்  (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) கலந்தாய்வும்,

28-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு 
மாவட்டம்  மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

BRTES PUDUGAI : இன்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் பேர் பங்கேற்பு

BRTES PUDUGAI : இன்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் பேர் பங்கேற்பு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

          மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

            இந்தத் தேர்வை எழுதிய 4,477 பேரில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தி ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 4,477 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,694 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதால், இவர்கள் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Teachers Transfer GO Issued.

http://www.padasalai.net/2014/06/teachers-transfer-go-issued.html#more

ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு 3 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்பு!!!


ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு 3 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்பு!!!


Thursday, June 12, 2014

பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு

          மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.

          மேலும், புத்திசாலியான மாணவர்களுக்கு (ஆண், பெண் இருபாலரும்), மாவட்ட அளவில் தனி மாதிரி பள்ளிகளை திறக்கவும் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமையை, பள்ளிகளில், விளையாட்டுத் தினமாக அறிவிக்கவும் ஆகும் செலவினங்கள் பற்றி மனிதவளத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.

           இதுதொடர்பாக அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பட்டர் மில்க், மருத்துவ ரீதியில், குழந்தைகளுக்கு நன்மை செய்வதால் அது பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, அதை குழந்தைகளுக்கு வழங்குவதற்கான செலவினம் கணக்கிடப்பட்டு வருகிறது.

              மதிய உணவுத் திட்டம், 12.65 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி குழந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்குகின்றன. இதுதவிர, சில மாநிலங்கள், மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளையும் வழங்குகின்றன.

மாதிரிப் பள்ளிகள்

          புத்திசாலி மாணவர்களுக்கு, மாதிரிப் பள்ளிகளை அமைப்பது குறித்த செலவினங்கள் பற்றி ஆராய, நவோதயா வித்யாலயா சங்கதன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த திட்டத்திற்கான யோசனை பழையது என்றாலும், கடந்த அரசுகளின் காலங்களில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

            கடந்த ஆட்சியில், மொத்தம் 6,000 மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டன. அவற்றில் 3,500, அரசால் நடத்தப்படும் வகையிலும், 2,500, அரசு - தனியார் ஒத்துழைப்பின் மூலம் நடத்தப்படும் வகையிலும் திட்டமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை விளையாட்டு

           சனிக்கிழமையை விளையாட்டு தினமாக அறிவிக்கும் திட்டத்தை, மனிதவள அமைச்சம் நடத்தும் பள்ளிகளில் முதல்கட்டமாக சோதனை செய்து பார்க்கலாம். பல பள்ளிகள், வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் நடைமுறையைக் கொண்டிருப்பதால், விளையாட்டிற்காக ஒதுக்கும் தினத்தில் வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

                பெரும்பாலான கல்விக் கொள்கைகள், கல்வியும், விளையாட்டும் இணைந்து வழங்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. ஆனால், நடைமுறையில், எதுவுமே அமல்படுத்தப்படுவதில்லை. விளையாட்டிற்கென்று ஒரு நாள் ஒதுக்கப்படும்போது, மாணவர்களிடையே நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்

         ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில்மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது.வரும் 2016ல்மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பளவிகிதத்தை நிர்ணயிக்கஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டதுஇதன்தலைவராகநீதிபதி அசோக்குமார் மாத்துார்உறுப்பினர்களாகவிவேக்ரே,ரத்தின்ராய்செயலராகமீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


          லோக்சபா தேர்தல் காரணமாகஇந்தக் குழுவின் செயல்பாடுகள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில்புதியஅரசு அமைந்தபின்இக்குழுஅலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது.முதற்கட்டமாகஅலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறதுஇந்த அலுவலர்குழுவில்சார்பு செயலர்தனிச்செயலர் உட்பட, 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

                 இந்த அலுவலர்களைபிற துறைகளில் இருந்து நியமிக்கமத்தியபணியாளர் துறையிடம் விவரம் கேட்டுள்ளனர்இந்த நியமனத்திற்குப் பின், 18மாதங்கள்ஏழாவது ஊதியக்குழு செயல்படும்அடுத்த ஆண்டுஆகஸ்ட் வரை,பல்வேறு துறைகளின்தற்போதைய சம்பள விகிதங்களை ஆய்வு செய்துபுதியவிகிதத்தை நிர்ணயிக்கும்

வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமருக்கு "காட்மா கோரிக்கை

           தனி நபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும்என்று பிரதமருக்கு கோவைதிருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் (காட்மாகோரிக்கை விடுத்துள்ளது.


        இதுதொடர்பாக பிரதமருக்கு காட்மா சங்கத் தலைவர் எஸ்.ரவிகுமார்எழுதிய கடிதம்:
            கோவைதிருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டகுறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றனநாடு முழுவதும் உள்ள பல்வேறுபெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்பட்டுஅனுப்பப்படுகின்றன. விரைவில் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலைஅறிக்கையில் குறுந்தொழில் வளர்ச்சிக்கென தனியாக சிறப்பு நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும்தேசிய சிறுதொழில் வளர்ச்சியை நாடு முழுவதும் துவங்கி,குறைந்த வட்டியில் குறுந்தொழில் கூடங்களுக்குக் கடன் வழங்கவேண்டும்.

         கோவையில் மத்திய அரசின் பொதுத் துறை தொழிற்சாலையைதுவங்கவேண்டும்குறுந்தொழில் முனைவோர் நிலம் வாங்கிக் கட்டடம்கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கவேண்டும்குறுந்தொழில்முனைவோருக்கு பொதுத் துறை வங்கிகளில் 8 சதவீதம் வட்டியில் ரூ. 25லட்சம் வரை கடன் வழங்கவேண்டும். மத்திய அரசின் பொதுத் துறைநிறுவனங்கள் கொள்முதல் செய்யும் உதிரிபாகங்களில் 20 சதவீதத்தை சிறுகுறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யஉத்தரவிடவேண்டும்.

          நாடு முழுவதும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியான மதிப்புக் கூட்டுவரியை அமல்படுத்தவேண்டும். கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கலால் வரிஉச்சவரம்பு ரூ. 1.5 கோடியாக இருந்து வருகிறதுஇதை ரூ. 3 கோடியாகஉயர்த்தவேண்டும்அரசுடைமை வங்கிகளில் கடனைத் திரும்பச் செலுத்த 3ஆண்டு கால அவகாசம் வழங்கவேண்டும். குறுந்தொழில் முனைவோர் மற்றும்நடுத்தர மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிநபர்


வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தவேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு:

தமிழகத்தில் 109 பேர் தேர்ச்சி அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது. தேர்வு பெற்ற, 1,122 பேரில், 109 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், தமிழக அளவில், முதலிடம் பெற்று, சாதனை படைத்தார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு, ஆண்டுதோறும், யு.பி.எஸ்.சி., (மத்திய பணியாளர் தேர்வாணையம்) போட்டித் தேர்வை நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளில், சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான தேர்வின், இறுதி முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்று மாலை வெளியிட்டது. தேசிய அளவில், பல்வேறு பணியிடங்களுக்கு, 1,122 பேர் தேர்வு பெற்றனர். தேசிய அளவில், கவுரவ் அகர்வால் என்ற இளைஞர், முதலிடம் பிடித்தார்.இறுதித் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 109 பேர் தேர்வு பெற்று, சாதனை படைத்தனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், அகில இந்திய அளவில், 45வது இடத்தையும், தமிழக அளவில், முதல் இடத்தையும் பிடித்தார்.

PG TRB 2012 TAMIL MEDIUM

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று (09.06.2014) நேரில் வேண்டுகோள் விடுத்தனர். ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு 2012 TRB PG தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என கல்வித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013 முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம்செய்யப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் தங்கள் நியமனம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும்வெளியிடாமல் இருப்பது வேதனயளிக்கின்றது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணிநியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பட்டியல்களில் எண்ணிக்கை

 தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.
* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.
* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.
பட்டியல் -1
இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.
பட்டியல் -2
இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
பட்டியல் -3
பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.
பட்டியல் -4
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது
பட்டியல் -5
தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.
பட்டியல் -6
அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.
பட்டியல் -7
மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.
(அ) மத்தியப் பட்டியல்
இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.
(ஆ) மாநிலப்பட்டியல்
இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.
(இ) பொதுப்பட்டியல்
இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.
பட்டியல் -8
அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.
பட்டியல் -9 :
நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
பட்டியல் -10 :
கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.
பட்டியல் -11 :
பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டியல் -12:
இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.
எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.