Thursday, June 12, 2014

வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமருக்கு "காட்மா கோரிக்கை

           தனி நபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும்என்று பிரதமருக்கு கோவைதிருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் (காட்மாகோரிக்கை விடுத்துள்ளது.


        இதுதொடர்பாக பிரதமருக்கு காட்மா சங்கத் தலைவர் எஸ்.ரவிகுமார்எழுதிய கடிதம்:
            கோவைதிருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டகுறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றனநாடு முழுவதும் உள்ள பல்வேறுபெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்பட்டுஅனுப்பப்படுகின்றன. விரைவில் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலைஅறிக்கையில் குறுந்தொழில் வளர்ச்சிக்கென தனியாக சிறப்பு நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும்தேசிய சிறுதொழில் வளர்ச்சியை நாடு முழுவதும் துவங்கி,குறைந்த வட்டியில் குறுந்தொழில் கூடங்களுக்குக் கடன் வழங்கவேண்டும்.

         கோவையில் மத்திய அரசின் பொதுத் துறை தொழிற்சாலையைதுவங்கவேண்டும்குறுந்தொழில் முனைவோர் நிலம் வாங்கிக் கட்டடம்கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கவேண்டும்குறுந்தொழில்முனைவோருக்கு பொதுத் துறை வங்கிகளில் 8 சதவீதம் வட்டியில் ரூ. 25லட்சம் வரை கடன் வழங்கவேண்டும். மத்திய அரசின் பொதுத் துறைநிறுவனங்கள் கொள்முதல் செய்யும் உதிரிபாகங்களில் 20 சதவீதத்தை சிறுகுறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யஉத்தரவிடவேண்டும்.

          நாடு முழுவதும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியான மதிப்புக் கூட்டுவரியை அமல்படுத்தவேண்டும். கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கலால் வரிஉச்சவரம்பு ரூ. 1.5 கோடியாக இருந்து வருகிறதுஇதை ரூ. 3 கோடியாகஉயர்த்தவேண்டும்அரசுடைமை வங்கிகளில் கடனைத் திரும்பச் செலுத்த 3ஆண்டு கால அவகாசம் வழங்கவேண்டும். குறுந்தொழில் முனைவோர் மற்றும்நடுத்தர மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிநபர்


வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தவேண்டும்.

No comments: