Friday, June 13, 2014

SPECIAL TET EXAM

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

          மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

            இந்தத் தேர்வை எழுதிய 4,477 பேரில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தி ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 4,477 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,694 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதால், இவர்கள் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: