Thursday, June 12, 2014

இந்திய அரசியல் (Indian polity)

சபாநாயகர்
* சட்டப் பேரவை தனது உறுப்பினர்களுள் இருவரை முறையே சபாநாயகராகவும், துணைச் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கின்றது.
* மாநிலச் சட்டப்பேரவைச் சபாநாயகரின் கடமைகள், அதிகாரங்கள், சலுகைகள் யாவும் மக்களவைச் சபாநாயகர் பெற்றுள்ளவை களுக்குப் பெருவாரியாக ஒத்துள்ளன.
ஆளுநர்
* ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.
* மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார்.
* ஆளுநருக்குரிய தகுதிகள், பதவிக்காலம், தனிச் சலுகைகள் மற்றும் பலவற்றை அரசியலமைப்பு விவரிக்கின்றது.
* மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
* முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்து கின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் அவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
* மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார்.
* ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
* சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.
* மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் அவர் நியமனம் செய்கின்றார்.
* சட்டமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் பெற்றுள்ள அதே சக்தியை ஆளுநரால் பிறப் பிக்கப்படும் அவசரச் சட்டமும் பெற்றுள்ளது.
* ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.
முதலமைச்சர்
* அமைச்சரவையின் தலைவர் முதலமைச்ச ராவார்.
* மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன.
* அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார்.
* முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும்.
* முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.
* அமைச்சகத்திலிருந்து ஆளுநருக்குச் செல்லும் ஒவ்வொரு தகவலும் முதலமைச்சரின் வாயிலாகவே செல்ல வேண்டும்.
* முதலமைச்சர் கட்சித் கொறடாக்களையும் நியமனம் செய்கின்றார்.
அமைச்சர்குழு
* சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

No comments: