Thursday, June 12, 2014

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்

         ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில்மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது.வரும் 2016ல்மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பளவிகிதத்தை நிர்ணயிக்கஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டதுஇதன்தலைவராகநீதிபதி அசோக்குமார் மாத்துார்உறுப்பினர்களாகவிவேக்ரே,ரத்தின்ராய்செயலராகமீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


          லோக்சபா தேர்தல் காரணமாகஇந்தக் குழுவின் செயல்பாடுகள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில்புதியஅரசு அமைந்தபின்இக்குழுஅலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது.முதற்கட்டமாகஅலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறதுஇந்த அலுவலர்குழுவில்சார்பு செயலர்தனிச்செயலர் உட்பட, 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

                 இந்த அலுவலர்களைபிற துறைகளில் இருந்து நியமிக்கமத்தியபணியாளர் துறையிடம் விவரம் கேட்டுள்ளனர்இந்த நியமனத்திற்குப் பின், 18மாதங்கள்ஏழாவது ஊதியக்குழு செயல்படும்அடுத்த ஆண்டுஆகஸ்ட் வரை,பல்வேறு துறைகளின்தற்போதைய சம்பள விகிதங்களை ஆய்வு செய்துபுதியவிகிதத்தை நிர்ணயிக்கும்

No comments: