Thursday, July 10, 2014

பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.

அவையாவன..

*5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.

*வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

*விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.தேசிய அளவில் வேளாண் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்.நிலங்களுக்கு ஏற்ற பயிர்களைதேர்வு செய்ய மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*தபால் நிலையங்கள் மூலமாக பெறப்பட்டு பயன்படுத்தாமல் உள்ள நிதிகளை முறையாகப் பயன்படுத்த திட்டம்.

*விவசாய கட்டமைப்புகளை அதிகரிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*குறுகிய கால ஊரக மறு சுழற்சி நிதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு.

*கிராமப்பற தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்குடு.

*சுற்றுலாத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக அதிகரிப்பு.

*இந்தியாவில் ஏற்கனவே உள்ள துறைமுகங்களை தரம் உயர்த்த ரூ.11 ஆயிரம் கோடி நிதி.

*தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் சூரிய ஒளி மின்சார திட்டம் உருவாக்கப்படும். இதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

*இந்தியாவில் கூடுதலாக 15,000 கி.மீ தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் பதிப்பு.

*தேசிய நெடுஞ்சாலைகள் துறையில் மாநில நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.37,887 கோடி முதலீடு. இதில் ரூ.3000 கோடி வடகிழக்கு மாநில தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிதியும் அடக்கம்.

*16 புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும்.

*வேளாண் தொலைக்காட்சி துவக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு கவனம்.

*ஒரு குடும்பத்துக்கு 2 வங்கிக் கணக்குகள் தொடங்க வசதி செய்து தரப்படும்.

*அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே வாடிக்கையாளர் இணைப்பு மையம் துவக்கம்.

*பெண் குழந்தைக்ளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம். பெண் குழந்தையின் கல்வி, திருமணத்தக்கு உதவும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் துவக்கப்படும்.

*தமிழகம் உட்பட 6 இடங்களில் ரூ.200 கோடியில் ஜவுளி தொழில்நுட்பம்.

*அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு.

*புதிதாக 6 கடன் வசூல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.

*கிடங்குகளின் திறனை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு.

*நதிகள் இணைப்புக்கு தீவிர முயற்சி எடுக்கப்படும்.நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*காஞ்சி, மதுரா உள்பட தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி.

*வெளிநாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த திட்டம்.

*நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கப்படும்.

*காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு.அதில், காப்பீட்டுத் துறையில் 49 சதவீதமாக அந்நிய முதலீடு அதிகரிக்கப்படும்.பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு மூலம் கூடுதல் நிதி திரட்டப்படும்.

*இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

*இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

*24 மணி நேரமும் மின் வசதி என்பதே மத்திய அரசின் இலக்கு.

*சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் இ - விசா சேவை அறிமுகம்.இந்த இ-விசா சேவை இன்னும் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்.

*பெண்கள் பாதுகாப்புக்காக உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்படும்.

*மூத்த குடிமக்களின் ஓய்வூதிய திட்டம் ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு.

*பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் பிரெய்லி முறை அறிமுகம்.

*இந்தியாவில் மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும். ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பூர்வாஞ்சள் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கப்படும்.படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும்.

*தேசிய குடிநீர் திட்டத்துக்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு.5 ஐஐடிக்கள் மற்றும் 5 ஐஐஎம்கள் புதிதாக உருவாக்கப்படும்.

*கிராமங்கள் அனைத்தும் பிராட் பேண்ட் மூலமாக இணைக்கப்படும்.

*தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.50,047 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*குறைந்த செலவில் வீடுகளை கட்டும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு.

*மதராசாக்களை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு. 

வரி செலுத்துனர் ஆவலுடன் எதிர்பார்த்த சலுகை: வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு


நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.

வருமான வரி வரம்பு ரூ.2 லட்சம் என்பதில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் படுவதாகக்கூறினார் அருண் ஜேட்லி.

பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...

Wednesday, July 9, 2014

TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர் பணிக்கு தேர்வு

பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tuesday, July 8, 2014

BRT மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு

 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு நாளை விசாரணக்கு வருகிறது
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில் 3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு 24.06.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தொடுக்கப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது என தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னேற்ற சங்க தலைவர் திரு.கே.சம்பத் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கல்வித்துறை அதிரடி உத்தரவு

                              பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும், மின் பிரச்சினைகளை மாணவர்களைக் கொண்டு சரிசெய்யக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகளை, பள்ளிகளுக்கு, கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில், மாணவர்களை கொண்டு, மின் சாதனங்களை இயக்கக் கூடாது.
சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில், துண்டித்த நிலையில் உள்ள மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டட மேல் மாடிக்குச் செல்லும் பாதைகளை மூடவேண்டும்.
ரோட்டோர பள்ளிகள் முன், வேகத்தடை அமைத்து, தினமும் ஆசிரியரை நியமித்து, மாணவர்களை ரோட்டை கடக்க செய்ய வேண்டும்.
கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். முதலுதவி பெட்டி அவசியம் இருத்தல் வேண்டும்.

Monday, July 7, 2014

பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை

          பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும்.

மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில், மாணவர்களை கொண்டு, மின் சாதனங்களை இயக்கக் கூடாது.சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில், துண்டித்த நிலையில் உள்ள மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
பள்ளி கட்டட மேல் மாடிக்குச் செல்லும் பாதைகளை மூடவேண்டும். ரோட்டோர பள்ளிகள் முன், வேகத்தடை அமைத்து, தினமும் ஆசிரியரை நியமித்து, மாணவர்களை ரோட்டை கடக்க செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். முதலுதவி பெட்டி அவசியம் இருத்தல் வேண்டும்.

தொடர் மாற்றங்களால் ஏமாற்றம் : தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது?

கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது.  இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92  பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல்  செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர். 


தேர்ச்சி  மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்ததால்  மேலும் 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக  தேர்ச்சியடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள்  அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துள்ளது.  தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட்  ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், முந்தைய வெயிட்டேஜ் முறையை  ரத்து செய்தும், புதிய முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண்  வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இடைநிலை ஆசிரியர்,  பட்டதாரி ஆசிரியர் எத்தனை பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்  என்பது குறித்து அரசு சார்பில் அறிவிப்பில்லை. இந்த கல்வி ஆண்டு  தொடங்கி பள்ளிகள் நடந்து வரும் நிலை யில் இதுவரை ஆசிரியர் பணி  நியமனம் செய்யப்படாததால் தேர்ச்சியடைந்தவர்கள் கடும்  அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தகுதித்தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் கூறுகையில், ‘தகுதி தேர்வு அறிவிப்பில் இருந்தே  பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. தெளிவான முடிவில்லாத நிலையில்  தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பணி நியமனம்  கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விரைவில் பணி நியமனம் செய்ய  நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

தமிழக கல்வித் துறையில் 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலி

தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் பேனல் தயார் நிலையில் இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில், தேனி, திருச்சி, வேலுார் (எஸ்.எஸ்.ஏ.,), சேலம் உள்ளிட்ட 13 கூடுதல் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், உசிலம்பட்டி, நெல்லை, திருப்பூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 35 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.
மேலும், ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி) இயக்குனர் பணி ஓய்வு பெற்றார். அப்பணியிடமும், நுாலகத் துறை இயக்குனர் மற்றும் 3 இணை இயக்குனர்கள் என உயர் கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. 32 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களில், 17 இடங்களில் பொறுப்பு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.
குறிப்பாக, மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் நிர்வாக ரீதியிலான பணிகள் முடங்கிப் போயுள்ளன. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல், பள்ளிகள் ஆய்வு மற்றும் மேற்பார்வை பணிகளும் பாதித்துள்ளன.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அரசு திட்டங்கள், உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பு முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உண்டு. இவர்கள் வழிநடத்தும் அதிகாரிகள், பணிமூப்பு அடிப்படையிலான பேனல் கல்வித் துறையில் தயார் நிலையில் இருந்தும், அவர்களை நியமிக்கும் நடவடிக்கை தாமதமாகிறது. இனிமேலாவது காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.