Saturday, August 23, 2014

885 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

885 ஆசிரியர் பயிற்றுனர்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்ற அனுமதி அளிக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 

Thursday, August 21, 2014

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும்என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா அறிவுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Saturday, August 16, 2014

மாணவ, மாணவிகளுக்கு புதுகையில் செஸ் போட்டி 17ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, : சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி வரும் 17ம் தேதி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலர் மன்றத்தில் நடக்கிறது.

ஒரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வு

பழநி அருகே ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேருக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் 18,19 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடந்தது. இத்தேர்விற்காக, ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றனர்.

தண்ணீர் இணைப்பு பெற முடியாமல் தவிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் இல்லாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலத்தில் ஆசிரியர், மாணவர்கள் உள்ளனர்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறல்

காளையார்கோவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கல்வித்துறை சார்ந்த பணிகளை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

சுதந்திர தின விழா - முறையான ஏற்பாடுகளின்றி வெயிலில் வதங்கிய மாணவர்கள்

சுதந்திர தினவிழாவில், முறையாக ஏற்பாடுகள் செய்யாததால், பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவ, மாணவியர் நிற்க வைப்பட்டனர். ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில், சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, ஒன்பது மணிக்கு கொடியேற்றப்பட்டு, அணி வகுப்பு மரியாதை, தியாகிகள் கவுரவித்தல், அலுவலர்களுக்கு நற்சான்று, பதக்கம் வழங்குதல் போன்றவை நடந்தன.

Monday, August 11, 2014

முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்

        
தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை.

  • BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து வளமைய   பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
  • முன்னதாக பட்டதாரி பணியிடங்களுக்கு பணி மாறுதல் நியமன ஆணை பெற்றவர்களை மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக விடுவித்து பணியில் சேர அனுமதிக்குமாறு கோரிக்கை. 
  • 2014-15 ஆம் கல்வியாண்டில் 1000 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்ய கோரிக்கை.