Friday, July 4, 2014

சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 1,112 பேர்!


  • மத்திய பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி), 4 வகையான சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1,112 பேர் மேற்கண்ட பணிகளில் நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
  • ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் குரூப் ஏ மற்றும் பி வகை மத்திய பணிகள் ஆகியவைதான் அவை. இந்தப் பட்டியலில், கவுரவ் அகர்வால் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
  • இரண்டாமிடத்தை முனிஷ் சர்மா என்பவரும், மூன்றாமிடத்தை ரசித் ராஜ் என்பவரும் பெற்றுள்ளனர்.
  • 3 அடுக்குகளாக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில், பொதுப்பிரிவில் இருந்து 517 பேரும், OBC பிரிவிலிருந்து 326 பேரும், SC பிரிவிலிருந்து 187 பேரும், ST பிரிவிலிருந்து 92 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • மொத்தம் 1,112 பேரில், 180 பேர் IAS பணிக்கும், 32 பேர் IFS பணிக்கும், 150 பேர் IPS பணிக்கும், 710 பேர் குரூப் ஏ மத்திய பணிக்கும், 156 பேர் குரூப் பி மத்திய பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • முடிவுகளை www.upsc.gov.in என்ற வலைதளத்தில் விரிவான அறிந்து கொள்ளலாம் மற்றும் மதிப்பெண் விபரங்கள் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: