Saturday, July 19, 2014

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி

          தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
            2014-2015ஆம் கல்வியாண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாகபழங்குடியினத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் தங்களைக் தற்காத்துக் கொள்ளவழிவகை செய்யும் பொருட்டு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி,நாமக்கல்சேலம்திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில்உள்ள 482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தேபயிற்சி 14 இலட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
              மேலும்கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும்மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகபள்ளிகளில் சதுரங்கப்போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
                      2013-2014ஆம் கல்வியாண்டில் முதன்முறையாக விளையாட்டுத்தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 10 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர்அதன் தொடர்ச்சியாக, 2014-2015ஆம்கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 20 இலட்சம் ரூபாய்செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: